13 Days only for NEET 2021


LESSON 31- Strategies for enhancement in food production (Tamil / English )

பாடம் 31- உணவு உற்பத்தியை மேம்படுத்தும் வழிகள்
1. பல்வேறு மாட்டினங்கள். 
    கிர், காங்கேயம், ஓங்கோல்.
கோழிகளின் வேறுபட்ட வகைகள். 
   லெக்ஹார்ன்
   பிராய்லர் வகை
    பிரம்மா
    அசீல்
    சில்க்கி

2. தேனீ வளர்ப்பு. 
          வணிக ரீதியாக தேனீ உற்பத்தி செய்வதற்காக தேனீக்களை பாதுகாத்து வளர்க்கும் முறை தேனீ வளர்ப்பு எனப்படும். அதிக தேன் கூடுகளை கொண்ட தேன் வளர்ப்பிடம் ஏபியரிகள் எனப்படும். 
      ஏப்பிகல்ச்சர் என்னும் சொல் Apis என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது. 

3. நீர்வாழ் உயிரி வளர்ப்பு. 
    அறிவியல் பிரிவு மீன்கள், மெல்லுடலிகள், கிரிஸ்டேஷியன்கள் மற்றும் நீர்த் தாவரங்கள் ஆகியவற்றை பண்ணை அமைத்து வளர்த்தல் என்பதாகும். 
      பல்வேறு வகை நன்னீர் வளர்ப்பு மீன்கள். 
     கட்லா, மடவை,கெண்டை.

4. பயிர் பெருக்கம். 
        தகுந்த சூழ்நிலையில் பயிர் வகைகளில் உயர் விளைச்சல், சிறந்த உரம், நோய் எதிர்ப்புத் திறன், குறுகிய கால வாழ்நாள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அறிவியலே பயிர்ப் பெருக்கம் ஆகும். 

5. பயிர் பெருக்கத்தின் படிநிலைகள். 
     தாவர அறிமுகம்
    தேர்வு செய்தல்
     கலப்புறுத்தம்
     கலப்பின வீரியம்
     சடுதி மாற்றப் பயிர் பெருக்கம்
     பன்மடிய பயிர் பெருக்கம். 
 மதிப்பிடுதல் மற்றும் புதிய ரகத்தை வெளியிடுதல்
விதைப் பெருக்கம் மற்றும் விநியோகம்

6. பசுமை புரட்சி. 
        என்ற சொல் வில்லியம் S காட் என்பவரால் உருவாக்கப்பட்டது. 
       தொடர் ஆய்வுகள், முன்னேற்றங்கள், புதுமைகள், தொழில்நுட்பப் பரிமாற்றங்களுக்கான முயற்சிகள் போன்றவற்றின் ஒருமித்த விளைவே பசுமைப் புரட்சி என வரையறுக்கப்படுகிறது. 
         1940 முதல் 1960 ன் பிற்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் உலகம் முழுவதிலும் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் கோதுமை, அரிசி போன்ற வேளாண் பொருட்களின் உற்பத்தியைப் பன்மடங்கு உயர்த்தியது. 

7. கோதுமை மற்றும் அரிசி. 
     1963 ஆம் ஆண்டு மெக்சிகோவிலிருந்து அரை குட்டைத்தன்மையுடைய கோதுமை இரகம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் உயர் விளைச்சல் தரும் சோனாரா 64 , சோனாலிகா, கல்யாண் சோனா போன்ற பல கோதுமை இரகங்களைப் பயிர் பெருக்கம் செய்வதற்காக ஐந்து நீண்ட காலத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இத்தகைய இரகங்கள் பரவலான உயிரி மற்றும் உயிரற்ற காரணிகளைத் தாங்கும் திறன் கொண்டவை. 
      பிறகு சிறந்த விளைச்சல் தரும் அரைக் குட்டை நெல் இரகமான ஜெயா மற்றும் ரத்னாவை இந்தியாவில் உருவாக்கினார். 

8. நோய் எதிர்க்கும் திறன் கொண்ட இரகங்கள். 
கோதுமை- ஹிம்கிரி- இலை மற்றும் பட்டைத்துரு, ஹில் பண்ட். 
பிராசிகா- பூசா சுவர்னிம்- வெண் துரு
காலிஃபிளவர்- பூசா சுப்ரா, பூசா ஸ்னோபால் K 1- கருப்பு அழுகல் மற்றும் சுருள் கருப்பு அழுகல்
காராமணி- பூசா கோமல்- பாக்டீரிய அழுகல்
மிளகாய்- பூசா சடபஹர்- மிளகாய் மொசைக் தேமல் வைரஸ், புகையிலை தேமல் வைரஸ் மற்றும் இலைச்சுருள்.

9. பூச்சி எதிர்க்கும் இரகங்கள். 
  பிராசிகா (கடுகு சிற்றின வகை) - பூசா கவ்ரவ்- அசுவினி பூச்சி
தட்டை பீன்ஸ்- பூசா செம் 2,பூசா செம் 3- இலைத்தத்துப் பூச்சி, அசுவினி மற்றும் பழத்துளைப்பான்
வெண்டைக்காய்- பூசா சவானி, பூசா A 4- தண்டு மற்றும் பழத்துளைப்பான்.

10. தனி செல் புரதம். 
       என்பது விலங்கு உணவாக அல்லது மனித துணை உணவாக பயன்படுத்தப்படும் நுண்ணுயிரிகளின் உலர்ந்த செல்களாகும். 
     இவை முழு மனித இனம் எதிர்கொள்ளும் புரதக் குறைப்பாட்டிற்கு தற்காலத்தில் ஒரு தீர்வாக விளங்குகிறது. 

11. திசு வளர்ப்பு. 
      தாவரப் புரோட்டோபிளாஸ்ட்கள், செல்கள், திசுக்கள் அல்லது உறுப்புகளை அவற்றின் இயல்பான அல்லது உறுப்புகளை அவற்றின் இயல்பான அல்லது சாதாரணச் சூழலில் இருந்து பிரித்தெடுத்துச் செயற்கையான சூழ்நிலையில் வளர்த்தல் திசு வளர்ப்பு என்கிறோம். 
      ஜெர்மனி நாட்டுத் தாவரவியலார் காட்லிப் ஹேபர்லேண்ட் முழு ஆக்குத் திறன் கருத்தை முன்மொழிந்தார். 

கலைச்சொல் அகராதி. 
1. சைபிரிட்.
       வேறுபட்ட பெற்றோர் மூலங்களின் செல்களினுடைய சைட்டோபிளாச இணைப்பினால் சைட்டோபிளாச கலப்பினம் கிடைக்கிறது. இச்சொற்றொடர் இரு வேறுப்பட்ட புரோட்டோபிளாஸ்ட்களின் சைட்டோபிளாச இணைவிற்கு பயன்படுத்தப்படுகிறது. 

2. இணக்கமாதல்.
        ஒரு தனித்தாவரம் முற்றிலும் மாறுபட்ட புதிய சூழலுக்கு தன்னை தகவமைத்துக் கொள்ளுதல் அல்லது ஒரு சிற்றினமோ அல்லது கூட்டமோ மாறுப்பட்ட புதிய சூழலுக்குப் பல நலைமுறைகளுக்குத் தங்களைத் தகவமைத்து க் கொள்ளுதல். 

3. நான் ரிகரெண்ட் பெற்றோர். 
      கலப்புயிரியின் பெற்றோர் தாவரங்களைப் பிற்கலப்பு சோதனைக்கு மீண்டும் பயன்படுத்தாமை.

4. ஸ்ட்ரைன்.
       ஒரு பொதுவான தொடக்கத்திலிருந்து தோன்றிய ஒரே மாதிரியாக உள்ள தாவரங்களின் தொகுதி. 

5. தொற்று தடைகாப்பு.
       தொற்றுத்தன்மையுடைய நோய் பரவாவண்ணம் தனிமைப்படுத்துதல்.


Technical points 
1. Different types of cattle. 
    Gir, Kangeyam, Ongole. 
    Different types of chicken breeds. 
    Leghorn- Hen and Cock
    White plymouth Rock hen and cock
    Light brahma Hen and cock
    Aseel- Hen and Cock
    Silkie

2. Apiculture. 
    Care and management of honey bees on a commercial scale for the production of honey is called Apiculture or Bee keeping. 
    The word apiculture comes from the Latin word apis meaning bee. 

3. Aquaculture. 
     Is a branch of science that deals with the farming of aquatic organisms such as fish, molluscs, crustaceans and aquatic plants. 
     Different types of freshwater cultivable fishes. 
     Catla, Mullet, Common carps. 

4. Plant breeding. 
      Is the science of improvement of crop varieties with higher yield, better quality, resistance to diseases and shorter durations which are suitable to particular environment. 

5. Steps in plant breeding. 
       Plant introduction
       Selection
       Hybridization
       Heterosis
       Mutation breeding
       Polyploidy breeding
Evaluation and release as a variety
Seed multiplication and distribution

6. Green Revolution. 
       The term was coined by William S Gaud in 1968.
       It is defined as the cumulative result of a series of research, development, innovation and technology transfer initiatives. 
       Agricultural production manifolds worldwide particularly in the developing countries between the 1940's and the late 1960's.

7. Wheat and rice. 
        In 1963 semi dwarf wheat of Mexico was introduced from which India got five prolonged strategies for breeding a wide range of high varieties like Sonora 64, Sonalika and Kalyansona possessing a broad spectrum of resistance to major biotic and abiotic condition. 
        Latter better yielding semi dwarf varieties of rice Jaya and Ratna developed in India. 

8. Disease resistance varieties. 
  Wheat- Himgiri- Leaf and stripe rust, hill bunt. 
  Brassica- Pusa swarnim(Kara rai) - white rust. 
  Cauliflower- Pusa Shubhra, Pusa snowball K 1- Black rot and curl blight black rot. 
  Coepea- pusa komal- bacterial blight. 
  Chilli- pusa sadabahar- chilly mosaic virus, tobacco mosaic virus and leaf curl. 

9. Pest resistance varieties. 
      Brassica (rapeseed mustard) - pusa gaurav- Aphids
      Flat bean- Pusa sem 2, Pusa sem 3- Jassids, aphids and fruit borer. 
     Okra(Bhindi) - Pusa sawani, pusa A 4-  shoot and fruit borer. 

10. Single cell protein. 
          They are dried cells of microorganism that are used as protein supplement in human foods or animal feeds. 
       SCP offers an unconventional but plausible solution to protein deficiency faced by the entire humanity. 

11. Tissue culture. 
        Growing plant, protoplasts, cells, tissues or organs away from their natural or normal environment, under artificial condition.
      Gottlieb Haberlandt the German Botanist proposed the concept Totipotency. 

Glossary. 
1. Cybrid. 
      Cytoplasmic  hybrid obtained by the fusion of cytoplasm of cells of different parental sources; a term applied to the fusion of cytoplasms of two different  protoplasts. 

2. Acclimatization. 
     The adaptation of an individual to a changed climate or the adjustment of a species or a population to a changed environment over a number of generations. 

3. Non recurrent parent. 
      The parent of a hybrid that is not again used as parent in back crossing.
 
4. Strain. 
      A group of similar indibiduals from a common origin. 

5. Quarantine. 
      Strict isolation imposed to prevent the spread of disease.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

No comments:

Post a Comment

Pages