15 Days only for NEET 2021

Lesson 30- Human health and diseases. Part 1  (Tamil / English )

பாடம் 30. மனித நலன் மற்றும் நோய்கள்

1. பரவும் நோய்கள். 

          ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் நோய்கள் தொற்று நோய்கள் அல்லது பரவும் நோய்கள் எனப்படுகிறது. இந்நோய்களை உண்டாக்கும் உயிரிகள் நோயூக்கிகள் ஆகும். 

      நோய்த்தொற்றிய நபரிடமிருந்து ஆரோக்கியமான நபருக்கு எந்த நிலையிலும் பரவாதவை தொற்றாநோய்கள் ஆகும். 

2. வைடால் சோதனை. 

       பாக்டீரியங்கள் காற்று, நீர் மூலமாகவோ அல்லது நீர்த்திவலைகள் /தூசிகள் போன்றவற்றை உள்ளிழுத்தல் மூலமாகவோ அல்லது நோய்த் தொற்றிய ஒருவரின் பாத்திரங்கள் மற்றும் ஆடைகள் போன்றவற்றைப் பரிமாறிக் கொள்வதன் மூலமாகவோ பரவுகின்றன. 

       இச்சோதனை மூலம் டைபாய்டு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்யலாம். 

3. அமீபியாசிஸ். 

           என்பது எண்டமீபா ஹிஸ்டோலைடிகா எனும் புரோட்டோசோவாவினால் ஏற்படுத்தப்படும், அமீபிக் சீதபேதி அல்லது அமீபிக் பெருங்கடல் அழற்சி நோயாகும். இவை மனித பெருங்குடலில் உள்ள கோழை செல்கள், பாக்டீரியாக்களையும் உட்கொண்டு வாழ்கின்றன. 

4. அஸ்காரிஸ். 

       என்பது ஒற்றை விருந்தோம்பியை கொண்ட ஒட்டுண்ணி ஆகும். இதில் பால்வழி வேறுபாட்டுத்தன்மை காணப்படுகிறது. குடலில் அக ஒட்டுண்ணிகளாக வாழும் அஸ்காரிஸ் லும்பிரிகாய்ட்ஸ் புழுக்களால் உருளைப்புழு நோய் உண்டாகிறது. இவை பொதுவாக உருளைப்புழுக்கள் என்றழைக்கப்படுகின்றன. இந்நோயானது கெட்டுப்போன உணவு மற்றும் நீரின் வழியாக வரும் வளர்கருக்களை உட்கொள்வதன் மூலம் பரவுகின்றது.

5.யானைக்கால் புழு. 

        இவை பொதுவாக அழைக்கப்படும் உச்சரீரியா பான்கிராஃப்டி எனும் ஒட்டுண்ணியால் யானைக்கால் நோய் உண்டாகிறது. மனிதர்களின் நிணநீர் நாளங்கள் மற்றும் நிணநீர் முடிச்சுகளில் இவை காணப்படுகின்றன. 

6. படர் தாமரை. 

        இவை மனிதர்களுக்கு தொற்றக்கூடிய சாதாரண நோயாகும். தோல், நகங்கள் மற்றும் தலைப்பகுதியில் காணப்படும் வறண்ட தோல், செதில் போன்ற புண்கள் இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும். தொடை இடுக்குகள் மற்றும் கால்விரலிடைப் பகுதிகளின் தோல் மடிப்புகளில் உள்ள வெப்பம் மற்றும் ஈரப்பதம் இப்பூஞ்சைகள் வளர உதவுகின்றன. 

     பாதங்களில் ஏற்படும் படர் தாமரையான சேற்றுப்புண் டினியா பெடிஸ் எனும் பூஞ்சையால் ஏற்படுகிறது. 

7. நோய்த்தடை காப்பு. 

      நோயை உண்டாக்கும் நோயூக்கிகளுக்கு எதிரான உடலின் ஒட்டுமொத்த செயல் திறன். 

        இயல்பு நோய்த்தடை காப்பு- இது உயிரினங்களில் இயற்கையாகவே காணப்படும். தொற்றுக்கு எதிரான நோய்த் தடுக்கும் ஆற்றலாகும். ஒவ்வொரு உயிரியும் பிறவியிலிருந்தே இந்த ஆற்றலை பெற்றிருக்கின்றன. 

       பெறப்பட்ட நோய்த்தடைகாப்பு- ஒரு உயிரினம் பிறந்த பிறகு தன் வாழ்நாளில் பெறும் நோய்த்தடை காப்பு. 

8. இயல்பு நோய்த்தடை காப்பு- வகைகள். 

    உடல் அமைப்புச் சார்ந்த தடைகள். 

         தோல்

         கோழைப்படலம்

உடற்செயலியல் சார்ந்த தடைகள். 

         உடல் வெப்பநிலை

       குறைந்த pH

       வேதிய நடுவர்கள்

       செல்விழுங்குதல் சார்ந்த தடைகள்

       வீக்கம் சார்ந்த தடைகள்.

9. பெறப்பட்ட நோய்த்தடைகாப்பின் கூறுகள். 

        செல்வம் நோய்த்தடைகாப்பு.

          எதிர்ப்பொருள்களின் உதவியின்றி செல்களினாலேயே நோயூக்கிகள் அழிக்கப்படுவது. 

      எதிர்ப்பொருள் வழி நோய்த்தடைகாப்பு/ திரவ வழி நோய்த்தடைகாப்பு. 

         எதிர்ப் பொருட்களை உற்பத்தி செய்து அதன் வழியாக நோயூக்கிகளை அழிக்கும் முறை. 

10. எதிர் பொருட்கள். 

          எதிர்ப்பொருள் தூண்டிகளுக்கு எதிராக உற்பத்தி செய்யப்படும் புரத மூலக்கூறுகள் எதிர் பொருட்கள் அல்லது இம்யுனோகுளோபுலின் எனப்படும். 

      உடற்செயலிய மற்றும் உயிர்வேதிய பண்புகளை அடிப்படையாகக் கொண்டு ஏதிர்ப்பொருட்கள் IgG (காமா), IgM(மியு), IgA (ஆல்பா), IgD (டெல்டா) மற்றும் IgE (எப்சிலான்) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

       1950 களில் போர்டெர் மற்றும் ஈடெல்மென் ஆகியோர் செய்த சோதனைகளின் முடிவில் இம்யுனோகுளோபினின் அடிப்படை அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. 


கலைச்சொல் அகராதி. 

1. ஹெட்டிரோகுரோமேட்டின். 

        என்பது நெருக்கமாக பிணைக்கப்பட்ட அல்லது சுருக்கப்பட்ட டி. என். ஏ ஆகும். 

2. தன் நிலை காத்தல். 

         உயிரினங்கள் தங்களுடைய உள்நிலை செயல்பாடுகளை நிலைத்த தன்மையுடன் வைத்திருத்தல். 

3. நோய்தடைக்காப்பு வினை. 

       எதிர்ப்பொருள் தூண்டியின் துலங்கலால் எதிர்ப்பொருள் உருவாக்கப்படுகிறது. 

4. இண்டர்ஃபெரான். 

             இது ஒரு வைரஸ் எதிர்ப்பு புரதமாகும். இவை வைரஸால் பாதிக்கப்பட்ட ஃபைபிரோபிளாஸ்ட் மற்றும் வெள்ளையணுக்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் பாதிப்படையாத செல்களையும் வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாக்கிறது. 

5. இடைப்பால் உயிரிகள். 

      ஆண், பெண் ஆகிய இருபால் பண்புகளையும் ஒருங்கே பெற்ற உயிரி. 

6. கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்துதல். 

        சேகரிக்கப்பட்ட விந்து செல்களை நுண்குழல் மூலம் கலவிக்கால்வாய் வழியாக கருப்பையினுள் செலுத்தப்படுவதாகும். 

7. கருமுட்டையை அண்ட நாளத்தினுள் செலுத்துதல். 

     கருமுட்டை அல்லது 8 செல் நிலை அல்லது அதற்கும் குறைந்த செல்களைக் கொண்ட கருவினை அண்ட நாளத்திற்குள் செலுத்துதல். 

8. கருப்பை உள் இடமாற்றம். 

       8 கருக்கோளச் செல்களை விட அதிகமான செல்களைக் கொண்ட கருவை, கருப்பையினுள் செலுத்தி, முழு வளர்ச்சி அடையும் வைத்தல். 

9. உட்வெளிக் கருவுறுதல். 

       ஆய்வகத்தில் உடலுக்கும் வெளியே கருவுறச் செய்தல். 

10. உடலுள் கருவுறுதல். 

       பெண் உயிரியின் உடலுள் இனச்செல்கள் இணைதல்

Technical points 

1. Communicable diseases. 

         Diseases which are transmitted from one person to another are called infectious diseases. Such disease causing organisms are called pathogens.

      Non infectious diseases- are not transmitted from an infected person to a healthy person. 

2. Widal test. 

         Bacteria spread through air, water or by inhaling the droplets /aerosols or even by sharing utensils, dresses with an infected person. Typhoid fever can be confirmed by Widal test. 

3. Amoebiasis. 

        Also called amoebic dysentry or amoebic colitis is caused by Entamoeba histolytica, which lives in the human large intestine and feeds on mucus and bacteria. 

4. Ascariasis. 

        Is a disease caused by the intestinal endoparasite Ascaris lumbricoides commonly called the round worms. It is transmitted through ingestion of embryonated eggs through contaminated food and water. 

5. Filariasis. 

       Is caused by Wuchereria bancrofti , commonly called filarial worm. It is found in the lymph vessels and lymph nodes of man. 

6. Ring worms. 

          Is one of the most common fungal disease in humans. Appearance of dry, scaly lesions on the skin, nails and scalp are the main symptoms of the disease. 

     Ring worms of the feet is known as Athlet's foot caused by Tinea pedis. They are generally acquired from soil or by using clothes, towels and comb used by infected persons. 

7. Immunity. 

        The overall ability of body to fight against the disease causing pathogen. 

      Innate immunity- is the natural phenomenon of resistance to infection which an individual possesses right from the birth. 

   Acquired immunity- the immunity that an individual acquires after birth. 

8. Type of innate immunity. 

     Anatomical barriers.

           Skin

          Mucus membrane

    Physiological barriers. 

           Tempetature 

           Low pH

           Chemical mediators

Phagocytic barriers

 Inflammatory barriers. 

9. Components of acquired immunity. 

     Cell mediated immunity. 

            When pathogens are destroyed by cells without producing antibodies.

     Antibody mediated immunity or humoral immunity - when pathogens are destroyed by the production of antibodies. 

10.Antibodies.

       are immunoglobulin protein molecules synthesized on exposure to antigen that can combine specifically with the antigen. 

      They are IgG(gamma), IgM (mu), IgA (alpha), IgD (delta)  and IgE (epsilon). 

     In the 1950s, experiments by Porter and Edelman revealed the basic structure of the immunoglobulin. 


Glossary. 

1. Heterochromatin. 

       Is a tightly packed form of DNA or condensed DNA. 

2. Homeostasis. 

        It is the state of steady internal conditions maintained by living things. 

3. Immune reaction. 

        The production of antibodies in response to antigens. 

4. Interferon. 

      An antiviral protein produced from virally infected fibroblasts and leucocytes induces antiviral state in uninfected cells. 

5. Intersex. 

      An individual showing a combination of male and female characters. 

6. Intra- uterine insemination. 

      Processed sperm sample is infused into the uterus, by passing the vagina. 

7. Intracytoplasmic sperm injection. 

      Injection of a sperm directly into the ovum. 

8. Intra uterine transfer. 

        Transfer of embryo with more than 8 celled blastomeres into the uterus. 

9. In vitro fertilization. 

        Fertilization outside the body in the laboratory. 

10. In vivo fertilization. 

        Fusion of gametes within the the female.

Dr. A. KINGSLIN M.Sc, BEd, Phd

Post Graduate Teacher in Botany

No comments:

Post a Comment

Pages